ஒட்டுவானோ? உன்னுள் ஒருவனாகி பேதங்களை…
விட்டானோ? பாசம் வெளிப்பட தொட்டானோ?
தப்பிதமாய் நூலணியும் சாதி மதப்பதரை…
ஒப்பாதே நல்லவன் என்று!
சொற்போ ருக்குத் தேவை *சத்தியம்...
அறியும் நேர்மை!
கற்பிப்போர்க் குத்தேவை வேற்றுமை
அகற்றிட்ட தூய்மை!
கற்போருக் குத்தேவை சமத்துவ தடை
விலகிய புலமை!
மற்போ ருக் குத்தேவை மதபுழு நெழி
யாஉடல் வலிமை!
சிற்ப திராவிடனுக்கே தேவை எதிலும்
ஆரிய தலைமை!
* [உண்மை]
மதம்... மானுடம் சிதைவுற, உண்டு;
கொப்பளிக்க, சாதி...
ஓநாய்கள் ஊளையிடுகின்றன!
பேத சூறாவளியை கிளப்பிவிட்டு;
ஆரிய பூகம்பம்...
அமைதியாய் யோகா என்கின்றது!
தீண்டாமை துயரபுயலை கடந்திட;
கப்பல் ஒன்று...
கல்விகரைத் தொட்டது!
எங்கிருந்தோ ஒரு அன்னிய...
வேற்றுமைத் தீப்பொறி;
பைத்தியமாய் மாறி, அய்யகோ...
உள்ளம் பதைக்க, விழி சிவக்க...
உதிரம் சிதற...
ஒரு கதிரவன் ஒளியிழந்திட்டது!
முத்துகிருஸ்ணா! உன்னை, சாம்பல்;
ஆக்கிட்ட சாதிசாண எரிகங்கு;
இந்துவாய் வாழ்ந்ததால்...
கொன்றிட்டது!
ஆக சுதந்திரம் அடையும் முன்பாகவே... நீ
காந்திக்கு நிகராகிட்டாய்!
“பார்ப்பானே வெளியேறு” முழக்கம் ஓர்நாள்;
நிச்சயம் கருத்தரிக்கும்!
Comments
Post a Comment